வெள்ளி, 3 டிசம்பர், 2010

செய்திகள் - செப்டம்பர் 16, 2010

இன்றைய சிந்தனை:

Quotes for the day:

இன்று சர்வதேச ஜனநாயக தினமாக ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

இன்றைய வீடியோ:

முக்கிய செய்திகள் 15 செப்டம்பர் 2010:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கலவரங்களை அடக்கும் முகமாக அரசியல் தீர்வு காண அம்மாநிலத்தில் ராணுவத்துக்கு அளிக்கப் பட்டு வரும் விசேஷ அதிகாரத்தை சில இடங்களில் நீக்குவது மற்றும் பிற செயல்பாடுகளைக் குறித்து பிரதமர் இல்லத்தில் கூடிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அனைத்துக் கட்சிக் குழு ஒன்று அம்மாநிலத்துக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்த பின்னர் எந்த முடிவும் எடுப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் சீன மொழி அறிமுகப்படுத்தப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சென்னை இந்தியன் தொழில்நுட்பக் கல்லூரியில் சீனமொழிப் பயிலகம் அமைக்கப்பட உள்ளது.

57ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அமிதாப் பச்சன் அவர் நடித்த "பா" எனும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பட்டத்தைப் பெற்றார். அமீர் கான் நடித்த "மூன்று முட்டாள்கள்" எனும் திரைப்படம் மிகவும் பிரபலமான படம் என்று தீர்மானிக்கப் பட்டது. இசை ஞானி இளையராஜா சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதை "கேரள வர்ம பழசி ராஜா" என்ற மலையாளப் படத்துக்காகப் பெற்றார்.

ஆந்திரப்ரதேசத்தில் தெலிங்கானா மாகாணத்தைச் சேர்ந்த வக்கீல்களுக்கு அரசு பதவிகளில் 42% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி கலவரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு

13 ஆயுள் கைதிகள் பேரரிஞர் அண்ணாவின் 101ஆவது பிறந்த நாளுக்கு முதல் நாள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வடகிழக்குப் பருவக்காற்று வரவிருக்கும் நிலையில் தோண்டப்பட்ட சாலைகள் பல சென்னை நகரின் இன்னும் மூடப்படாமல் உள்ளன.

சென்னையில் புதிய கண் நோய் பரவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

செய்திகள் செப்டம்பர் 15, 2010

தினம் ஒரு சிந்தனை - இன்றைய சிந்தனை - உறவுகள் - தமிழ்த்தேனீ

QUOTES FOR TODAY - by Cheenu Uncle


இன்றைய இந்தியன் தமாஷா: காமன்வெல்த் விளையாட்டுக்கள்


இந்திய மக்களுக்கான முக்கியச் செய்திகள் - ஆகிரா