இன்றைய செய்திகள் - செப்டம்பர் 11, 2010
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று நன்றி செலுத்தும் நன்னாளான ஷவ்வால் முதல் நாள்
ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை
இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் அருளட்டும்.
ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை
இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் அருளட்டும்.
விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
2001ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய-பாகிஸ்தான் இணை டென்னிஸ் வீரர்கள் ரோஹன் போபன்னா, ஐசம் உல் ஹக் குரெஷி (Indo-Pak pair of Rohan Bopanna and Aisam-ul-Haq Qureshi) ஆகியோர் இருவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தனர். இருப்பினும் இந்திய பாகிஸ்தான் மக்களிடையே எவ்வித விரோத மனப்பான்மையும் இல்லை எனும் உண்மையை உலகறியச் செய்துள்ள இவர்களது ஒன்றுபட்ட முயற்சியும் சாதனையும் உலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
மேலும்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக