ஞாயிறு, 28 நவம்பர், 2010

செய்திகள்: செப்டம்பர் 13, 2010

இன்றைய செய்திகள்செப்டம்பர் 13, 2010

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் கலவரத்தை அடக்கி அமைதியை நிலை நாட்டவும் இந்திய ராணுவத்திற்கு விசேஷமான அதிகாரங்கள் அளிக்கும் சட்டம் Armed Forces Special Powers Act (AFSPA) ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவின் வேண்டுகோளின் படி மாநிலத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நீக்கப்பட்டது. இந்த முடிவு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் பாரதப் பிரதமரும் கலந்தாலோசித்த பின்னர் நேற்று (செப்டம்பர் 11, 2010) எடுக்கப்பட்டது. இது குறித்து நேற்று ஈகைத் திருநாளைக் கொண்டாடும் நிமித்தமான தொழுகை முடிந்த பின்னர் தங்களது மறுப்பை அமைதியான முறையில் தெரிவிக்க மாநில அரசின் அனுமதியை வேண்டிப் பெற்ற பிரிவினைவாதிகள் தங்களது வாக்குறிதியை மீறி காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்களுக்குத் தீ வைத்துப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.


இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் கொக்லி எனும் அதிகாரி Shaurya Chakra எனும் மூன்றாவது உயர்நிலை பதக்கத்தைப் பெற்ற இரண்டே மாதங்களுக்குப் பின்னர் April 30, 2006 அன்று சந்தேகத்துக்கிடமான விதத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து மரணமடைந்தார். அவர் சமீபத்தில் திருமணம் புரிந்து கொண்ட பின்னர் மணவாழ்வில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்ததை அவரது தாயார் ஏற்க மறுத்துத் தன் மகனது மரணத்துக்குக் காரணமானவர்களை தண்டிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இத்தனை காலமும் மௌனம் காத்துவந்த இறந்த கேப்டனின் மனைவியும் தன் மாமியாரின் இவ்வேண்டுகோளை தானும் வற்புறுத்தியுள்ளார்.


உலகப் பணக்காரர்களில் 4ஆவது இடத்தில் தற்போது இருக்கும் முகேஷ் அம்பானி வரும் 2014ஆம் ஆண்டு உலகில் முதல் பணக்காரராகக் கூடும் என ஃபோர்பெஸ் எனும் பத்திரிக்கை குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டு கணித்து வெளியிட்டுள்ளது.


சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிலர் லண்டன் நகரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறச் சென்ற இடத்தில் அங்குள்ள கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டிடம் பெரும் தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆட்டத்தில் முறைகேடுகள் செய்துள்ளதை லண்டன் நகரில் செயல்படும் நியூஸ் வொர்ல்ட் எனும் ஒரு பத்திரிக்கை வீடியோ காட்சிகளின் மூலம் வெளியிட்டது. 




இதனைத் தொடர்ந்து எழுந்த குற்றச் சாட்டுகள், விசாரணைகள் மற்றும் மறுப்புகள் எனும் தொடர் நாடகங்களைத் தொடர்ந்து தற்போது இத்தகைய கிரிக்கெட். சூதாட்டத்தில் மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மத்திய அமைச்சர் ஷரத் பாவார் தலைமை வகிக்கும் அகில உலக கிரிக்கெட் அமைப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே சந்தேகம் கொண்டிருந்தாலும் இவ்விஷயத்தில் எவ்வித செயல்பாடும் மேற்கொள்ளாத நிலை பல கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.


ஆஜ்மீர் நகரத்தில் மசூதியாக இருந்த ஆறு மாடிக் கட்டிடன் இன்று தானே இடிந்து விழுந்து தரைமட்டமானது. இக்கட்டடம் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளதென அதிகாரிகள் முன்னரே அறிவித்திருந்த காரணத்தால் அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை.


பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் எனுமிடத்தில் சைனாவின் ராணுவம் தனது வீரர்களை நிறுத்திய்ள்ளது. இது குறித்து இந்திய அரசு சீன அரசிடம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது. 


இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக